போதைபொருள் தடுப்பு தொடர்பாக அரசாங்கம் 

நன்கு செயல்படுகின்றது. 

சிறையில் அடைத்துவைத்திருப்போரின் தொகை மூலம் 

இதனைத் தெரிந்து கொள்ள முடியும்


அரசியல் இலாபத்திற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை :


-அமைச்சர்  ரவூப் ஹக்கீம்




அரசியல் இலாபத்துக்காகவே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கெதிரான  நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளது என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.   எதிர்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.   நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ள அமைச்சர்ஐக்கிய தேசிய கட்சி எமது ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் எனநினைத்தால் அது அவர்களது அறியாமையை காட்டுவதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   போதைபொருள் தடுப்பு தொடர்பாக அரசாங்கம் நன்கு செயல்படுவதை சிறையில் அடைத்து வைத்திருப்போரின் தொகை மூலமே தெரிந்துக்கொள்ளலாம் என்றும் போதைபொருளுக்கெதிரான தண்டனை பெறுபவரின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top