இன்று சீனாவில் ஐ.நா பொதுச்செயலாளர்
பான் கி மூனை சந்திக்கிறார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ
சீனாவில்நடக்கும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு உரையாற்றுகிறார்.
இதனிடையே, நேற்று சீனாவின் ஷங்காய் நகருக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் அதிபரை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாகவும் பாகிஸ்தான் இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என பாகிஸ்தான் அதிபர் உறுதியளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று ஐ.நா பொதுச்செயலாளர் பான்கி மூனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment