மோடி பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளுக்கு அழைப்பு;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவும் கலந்து கொள்வார் என தகவல்கள்


இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிஎதிர்வரும் 26 ஆம் திகதி திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளுமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் வருமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பதவி ஏற்பு வைபவத்தில் கலந்து கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top