வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம்:
தேர்தல் முடிவு குறித்து சோனியா காந்தி கருத்து
இந்திய மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த தேர்தலை சந்தித்தாலும் அந்த கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், தோல்வி குறித்த இன்று செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ராகுல் காந்தி, கட்சியின் துணைத்தலைவர் என்ற முறையில் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் பேட்டி அளித்த சோனியா கூறுகையில், வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம் என்றார். மேலும், மக்களின் தீர்ப்பை பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் முக்கிய கொள்கையில் சமரசம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment