அ.தி.மு.க வெற்றி பணப்பலத்தால் உருவாக்கப்பட்டது :

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்


அ.தி.மு.க 37 இடங்கள் முன்னிலை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக வெற்றி பணப்பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி என கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அவரின் ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் துயரங்கள் நீங்கிடும். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வறுமை ஒழியும். உலக அரங்கில் இந்தியா வல்லரசாக மாறிடும் என்ற நம்பிக்கையோடு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நரேந்திர மோடிக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், .தி.மு. மற்றும் தி.மு..விற்கு மாற்றாக இந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆளும் கட்சியினர் தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர். கடைசி இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, ஆதாரங்களுடன் வெளி வந்துள்ளது. இந்த வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல், பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றியாகும். இருந்த போதிலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

MAKKAL VIRUPPAM

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top