நரேந்திர மோடிக்கு

வங்கதேச முன்னாள் பிரதமர் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.


வங்காளதேச முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியக்கட்சி தலைவருமான காலிதா ஸியா, நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக அனுப்பியிருப்பதாக, அக்கட்சியின் துணைத்தலைவரும், செய்தித்தொடர்பாளருமான ஷம்ஷேர் மொபின் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


MAKKAL VIRUPPAM

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top