நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து
இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நேற்று இரவு தொலைபேசியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு வருமாறும் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா–அமெரிக்கா கூட்டு வர்த்தகம் மற்றும் உலக பொருளாதார நிலை பற்றியும் இருவரும் பேசினார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2005 ஆம்ம் ஆண்டு குஜராத் கலவரத்தை தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment