ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று
அரையிறுதிக்கு முன்னேறியது

பிரான்ஸுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ரியோ டி ஜெனீரோவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இரு பெரும் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்பதால் முடிவின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இரு நாடுகளின் ரசிகர்களும் பிரேசிலிலும், தங்கள் நாடுகளிலும் ஆட்டத்தைக் காண பேரவால் கொண்டிருந்தனர்.
உலகக் கோப்பையின் முந்தைய ஆட்டங்களில் ஜெர்மனியை விட பிரான்ஸ் சிறப்பாக விளையாடி இருந்ததால் அந்த அணியின் மீதே அதிக பேரின் கவனம் இருந்தது.
ஆனால், அந்தக் கவனம் இந்த ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்திலேயே கலைந்திருக்கும். கோல் கம்பத்திலிருந்து சிறிது தொலைவில் ஜெர்மனிக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை டோனி க்ரூஸ் அடித்தார். அந்த கிராû, கோல் கம்பத்துக்கு அருகே இருந்த மேட்ஸ் ஹேம்மல்ஸ் அழகாக தனது தலையால் முட்டி கம்பத்துக்குள் பந்தை புக வைத்தார்.
பிரான்ஸின் கரீம் பென்சமாவின் செயல்பாடு இந்த ஆட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது. இருப்பினும் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
ஜெர்மனியின் 13ஆவது நிமிட கோலை ஈடு செய்ய பிரான்ஸுக்கு 33ஆவது நிமிடத்தில் அருமையான வாய்ப்பு கனிந்து வந்தது. அந்த அணியின் மேத்யூ வெல்புனே அடித்த பந்தை நோயர் நேர்த்தியாகத் தடுத்தார்.
அதன் பின் இரு அணி வீரர்களும் பல முறை முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டம் நேரம் முடிவதற்கான கட்டம் நெருங்கிக் கொண்டே இருந்தது. நமது அணியினால் கோல் அடிக்க முடியாது என்பதை உணர்ந்த பிரான்ஸ் ரசிகர்கள் இறுதிக்கட்டத்தில் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தனர்.
90 நிமிடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கடைசி முயற்சியாக பின்ஸின் பென்சிமா அடித்த பந்தை நோயர் தடுத்தார். கோலாக மாற வேண்டியதை நோயர் தடுத்ததால், அதிருப்தி அடைந்த பென்சிமா, தனது அணியின் துரதிருஷ்டத்தை எண்ணி சிரித்தவாறே அங்கிருந்து நகர்ந்தார்.
பிரான்ஸுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top