முஸ்லிம்களுக்கு எதிரான
வன்முறைகளை
நிறுத்துங்கள் என்று
கூறியதற்காக
தலாய் லாமா ஆன்மிக வழிகாட்டியே அல்ல
கலகொட அத்தே
ஞானசார தேரர் சாடல்
முஸ்லிம்களுக்கு
எதிரான வன்முறைகளை
நிறுத்துங்கள் என்று கூறியதற்காக தலாய் லாமா
ஆன்மிக வழிகாட்டியே
அல்ல என்று
பொது பல
சேனா வின்
பொதுச் செயலாளர்
கலகொட அத்தே
ஞானசார தேரர்
சாடியுள்ளார்.
கலகொட
அத்தே ஞானசார தேரர் இது பற்றிக் கூறும்போது,
“தலாய் லாமாவிற்கு
இலங்கையில் உள்ள உண்மையான நிலவரம் புரியவில்லை.
இஸ்லாமிய தீவிரவாதிகளின்
பிரச்சாரத்தில் அவர் வீழ்ந்து விட்டார், அவரை
உலக பெளத்தத்
தலைவராக ஏற்றுக்
கொள்ள மாட்டோம்.
தலாய்
லாமா என்பவர்
மேற்கு நாடுகளினால்
உருவாக்கப்பட்டவர், கத்தோலிக்கர்களுக்கு போப் எப்படியோ பெளத்தர்களுக்கு தலாய்
லாமா என்று
மேற்குலகம் நினைக்கிறது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை
அவர் ஆன்மிக
வழிகாட்டியல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.
மியான்மரில்
பெளத்த வன்முறையைத்
தூண்டி விடும்
விராதுவுடன், கலகொட அத்தே ஞானசார தேரர் ஒப்பிடப்படுகிறார்.
ஆனால் ஞானசார,
இதனைக் கடுமையாக
மறுத்து, “நாங்கள்
இருவரும் சந்தித்தோம்,
இருவருமே அமைதிக்கான
துறவிகளே, எங்கள்
கைகளில் இரத்தக்கறை
இல்லை” என்று
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment