அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்
வருடாந்த இப்தார் நிகழ்வு
அம்பாறை
மாவட்ட ஊடகவியலாளர்
சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த
20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (2014-07-20) அக்கரைப்பற்று ஆசியா சீப் ரெஸ்ரூடனில்
சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ். இஸ்ஸதீன்
தலைமையில் நடைபெற்றது.
ஆசியா
சீப் ரெஸ்ரூடன்ட்,
மற்றும் றஸ்பாஸ்
டெக்ஸ்டையில்ஸ் ஆகியவற்றின் அனுசரனையில் இடம்பெற்ற இந்த இப்தார்
நிகழ்வில் முஸ்லீம்,
இந்து. கிறிஸ்தவ
சமயத்தலைவர்களுடன் கிழக்கு மாகான
சபை உறுப்பினர்களான
கே.புஸ்பகுமார்
(இனிய பாரதி)
ஏ.எல்.எம்.நஸீர்,
ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று,
அட்டாளைச்சேனை பிரதேச
செயலாளர்களான ஏ.எல்.எம். சலீம்,
ஐ.எம்
ஹனிபா, அட்டாளைச்சேனை
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர்களான ஏ.எம்.அன்சில்,
ஏ.எம்.நௌசாத். அக்கரைப்பற்று
மாநகர சபை உறுப்பினர்
எஸ்.எம்.சபீஸ் அக்கரைப்பற்று பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி கே.கே.பண்டார,
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.முனாஸ், மற்றும்
ஊடகவியலாளர்கள்,வர்த்தகர்கள், கவிஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,
கல்விமான்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment