இங்கிலாந்து இளவரசி கேத்தே மிடில்டன் 

மீண்டும் கர்ப்பம்?

அவர் கருவில் இரட்டை பெண் குழந்தைகளை சுமப்பதும் உறுதியாகி உள்ளதாகவும் தெரிவிப்பு

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேத்தே மிடில்டனுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்-கேத் மிடில்டன் தம்பதியினருக்கு ஜார்ஜ் என்ற எட்டுமாத குழந்தை உள்ளது.
அரச கால விளையாட்டுகளில் ஈடுபடுவதை தன் முழு நேர பொழுது போக்காக கொண்டுள்ள கேத்தே மிடில்டன்  தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார் என ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவரது பள்ளித்தோழி ஒருவர் இதகவலை உறுதிபடுத்தியதாகவும் செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் கேத்தே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட உடல்நலப் பரிசோதனையில் அவர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் அவர் கருவில் இரட்டை பெண் குழந்தைகளை சுமப்பதும் உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெண்குழந்தைகளை பிரசவிக்கவுள்ள கேட் மிடில்டன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் வில்லியம்ஸ் தம்பதியினர் நேற்று அதிகாலை வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, சிந்தியா ரீட் என்ற பெண்ணை சந்தித்தனர். அவர் குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு ஒரு கம்பளி சால்வை பரிசாக அளித்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட கேத்தே மிடில்டன், அந்த பெண்ணிடம் நீங்கள் கூடியவிரைவில் இன்னும் ஒரு சால்வை எங்களுக்கு தரவேண்டியிருக்கும் என்று கூறினார். இதிலிருந்து கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
நேற்று குயின்ஸ்டவுனில் உள்ள ஒயின் தயாரிக்கும் ஆலைக்குச் சென்ற தம்பதியினர் அங்கு இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் ஒயின் அருந்தி உள்ளனர்.அதோடு கேத் மிடில்டன் அடிக்கடி தண்ணீர் குடித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து அரண்மணையில் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை.கேத்தியின் முதல் கர்ப்பம் அடைந்த  செய்தியை 2012 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக் அறிவித்தது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top