புதிதாக பதவி ஏற்க உள்ள 37 அ.தி.மு.க. எம்.பி.க்கள்

இன்று ஜெயலலிதாவுடன் சந்திப்பு



இந்திய பாராளுமன்றத்தில் புதிதாக பதவி ஏற்க உள்ள 37 .தி.மு.. எம்.பி.க்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட .தி.மு.., 37 இடங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்அமைச்சருமான ஜெயலலிதா தனியொரு ஆளாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வெற்றிக் கனியை பறித்துள்ளார்.புதிதாக பதவி ஏற்க உள்ள 37 .தி.மு.. எம்.பி.க்களும், முதல்அமைச்சர் ஜெயலலிதாவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top