பதவி விலகிய
மன்மோகன்சிங்குடன்
ஒபாமா டெலிபோனில் பேச்சு
பதவி
விலகிய பிரதமர் மன்மோகன்சிங்கை அமெரிக்க
அதிபர் ஒபாமா டெலிபோனில்
தொடர்பு கொண்டு பேசினார். அப்போது,
‘பொது வாழ்க்கையில் உள்ள தலைவர்களில் நான்
அதிகம் பாராட்டுபவர்களில் நீங்களும் ஒருவர். உங்களுடன் அன்றாட
அடிப்படையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை
இழக்கப் போகிறேன்’ என்று ஒபாமா கூறினார் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
ஒபாமாவின் இக்கருத்திற்கு மன்மோகன்சிங்
நன்றி தெரிவித்துக் கொண்டார். ‘ஒபாமாவின் தலைமை, சர்வதேச சவால்களுக்கு
தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்திய-அமெரிக்க உறவு நல்ல மாறுதலை
கண்டுள்ளது. புதிய இந்திய அரசு,
இந்த உறவை இன்னும் மேம்படுத்தும்
என்று நம்புகிறேன்’ என்றும் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment