மெஸ்ரோ அமைப்பின் அனுசரணையில்

சாய்ந்தமருதில் 'யூத் பிரிமியர் லீக்' மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

மெஸ்ரோ அமைப்பின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் 'யூத் பிரிமியர் லீக்' மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த 16 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் .எம்.ஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ்  பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம் சாய்ந்தமருது இளைஞர் மத்திய நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்..லத்தீப் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ..பஸீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் அம்பாறை இளைஞர் வள நிலைய பொறுப்பதிகாரி .அமீர் , இளைஞர் சேவைகள் உத்தியோஸ்தர்களான எம்.எச்.எம்.பைஸர் அமீன், எம்.எம்.பரீட், .முபாறக் அலி, எம்...அஸ்வத் அலி, தென்கிழக்கு பல்கலைக்கழக உடற் கல்வித்துறை போதனாசிரியர் .எம்.கடாபி ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களான றிலக்ஸ் இளைஞர் கழகம், செறன்டிப், இல்ஹாம், பிளைங் ஹோர்ஸ், வுளுமிங் ஸ்ரீ லங்கா, ருவின்னர்ஸ், ஒல்லாந்தர், போத்துக்கேயர், ஜெனீவ் ஸ்டார், ஹொலி ஹீரோ, ஸாஹிறா, அல்-வாஹிதியா, குவிர்டன் ஆகிய இளைஞர் கழகங்கள் பங்குபற்றின.
இறுதிப் போட்டியில் போத்துக்கேயர் இளைஞர் கழகமும், ஒல்லாந்தர் இளைஞர் கழகமும் மோதியது.

இதனடிப்படையில் ஒல்லாந்தர் அணி வெற்றி பெற்று சாய்ந்தமருது 'யூத் பிரிமியர் லீக்' சம்பியனாக தெரிவானது. ஒல்லாந்தர் அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை அதன் தலைவர் எம்..எம். முபீனிடம் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

MAKKAL VIRUPPAM


MAKKAL VIRUPPAM


MAKKAL VIRUPPAM

MAKKAL  VIRUPPAM

MAKKAL VIRUPPAM

MAKKAL VIRUPPAM

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top