வலுமிக்க மோடி அரசு இலங்கைக்கே
சாதகம்;
தனிப்பெரும்பான்மை பெற்றிருப்பதால்
தமிழகத்துக்கு பணியாது என்கிறது
அரசு
இந்தியாவில்
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்குரிய பலத்தை பாரதீய ஜனதாக்கட்சி
பெற்றிருப்பது இலங்கைக்குச் சாதகமான விடயமாகும் என்றும்,
தமிழ் நாடு போன்ற மாநில
அரசுகளுக்குப் பணிய வேண்டிய சூழ்நிலை
மத்திய அரசுக்கு ஏற்படாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும்
அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மஹிந்தவுக்கும்
மோடிக்குமிடையில் பல ஒற்றுமைகள் இருப்பதால்
மஹிந்த மோடி கூட்டு எதிர்காலத்தில்
சிறந்த உறவுகளைப் பேணும் என்றும் அவர்
கூறினார்.
அமைச்சரவை
முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கேள்வி நேரம்
ஆரம்பமானது.
இதன்
போது, இந்திய
நாடாளு மன்றத் தேர்தலில் மோடி
தலைமையில் களமிறங்கிய பாரதீய ஜனதாக் கட்சி
தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணி
வெற்றிபெற்றுள்ள விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பல கோணங்களில் கேள்விக்
கணைகளைத் தொடுத்தனர். இவற்றுக்கு பதில் வழங்கையிலேயே அமைச்சர்
மேற்கண்டவாறு கூறினார்.
""இலங்கை அரசுக்கும் காங்கிரஸ்
அரசுக்குமிடையில் கடந்த காலங்களில் சிறந்த
உறவுகள் இருக்கவில்லை. ஒரு முறுகல் நிலையே
ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய மத்தியில் புதிய
ஆட்சியொன்று மலர்ந்துள்ளது இதனுடன் இலங்கையின் உறவுகள்
எவ்வாறு அமையும்'' என எழுப்பப்பட்ட கேள்விக்கு
பதிலளித்த அமைச்சர்,
வரலாற்றை
எடுத்துக்கொண்டால், ஒரு கால கட்டத்தில்
இலங்கையில் இந்திய விரோத புத்தகங்கள்
வெளியிடப்பட்டன.
மற்றுமொரு
காலப்பகுதியில் இந்தியப் பொருள்களைக் கொள்வனவு செய்தால் கை வெட்டப்படும் சூழ்நிலை
இருந்தது. அதன் பின்னர் டில்லியுடன் சிறந்த முறையில் உறவுகள்
பேணப்பட்டன. எனவே, பிரதமர் மோடி
தலைமையில் அமையவுள்ள இந்திய அரசுடனும் சுமுகமான
முறையில் உறவு பேணப்படும் என்று
குறிப்பிட்டார்.
அதேவேளை,
""தமிழக அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்
என்று இந்தியாவின் புதிய பிரதமர் மோடி
தெரிவித்துள்ளார். இதை எந்தக் கோணத்தில்
இலங்கை அரசு உற்று நோக்குகின்றது''
என எழுப்பப்பட்ட கேள்விக்கு,
.
தனித்து
ஆட்சியமைப்பதற்குரிய பலத்தை பா.ஜ.க. பெற்றிருப்பதால், மாநில
அரசுகளின் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
சரியான முடிவோ, தவறான முடிவோ
அதைத் தனித்து எடுப்பதற்குரிய பலம்
சக்தி மோடிக்கு கிடைத்துள்ளது. மத்தியில்
இவ்வாறு வலுவானதொரு ஆட்சியமைவது இலங்கைக்கு சாதகமான விடயமாகும்.
""மத்தியில்
அமையவுள்ள புதிய அரசுடன் இலங்கையின்
அணுகு முறைகள் எவ்வாறு அமையும்''
என்ற கேள்விக்கு, மஹிந்தவுக்கும் மோடிக்குமிடையில் ஒற்றுமையான பல விடயங்கள் இருக்கின்றன.
எனவே, சிறந்த முறையில் உறவுகள்
அமையும் என்று பதில் வழங்கினார்
அமைச்சர் கெஹலிரம்புக்வெல்ல.
""இந்தியாவுக்கு வெளியில் வாழும் தமிழர் தொடர்பிலும்
கவனம் செலுத்துவார் என்று மோடி அறிவித்துள்ளார்.
இது இலங்கை விடயத்தில் எவ்வாறு
தாக்கம் செலுத்தும்?'' என எழுப்பட்ட கேள்விக்கு
பதிலளித்த அமைச்சர்,அது ஒரு நற்சிந்தனையாகும்.
இந்தியர் என்று அவர் பொதுவாகத்
தான் குறிப்பிட்டிருந்தார் போலும் என்றார்.
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியத்
தேர்தல் முடிவடைந்த கையோடு இந்தப் பயணம்
அமைந்துள்ளது. இது தொடர்பில் உங்கள்
கருத்து என்ற வினாவுக்கு விடையளித்த
அமைச்சர் கெஹலிய, இது முன்கூட்டியே
திட்டமிடப்பட்ட பயணம். அதற்கும் இதற்கும்
தொடர்பில்லை.
. அத்துடன்,
மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலங்கை
வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும்
குறிப்பிட்டார்.
-

0 comments:
Post a Comment