இரவில் அழும் குழந்தைகளை உறங்க வைக்கும் வழி
தாய் தன்னுடன் சேர்த்து குழந்தையை அணைத்தபடி
படுத்துக்கொள்ள
வேண்டும்.
“பத்து
பிள்ளை பெற்றவளுக்கு,
தலைப் பிரசவத்தில்
குழந்தை பெற்றவள்
வைத்தியம் சொன்ன
கதையைப்போல” என்ற பழமொழி ஒன்று உள்ளது
அப்பழமொழிக்கு ஏற்ப இன்றைய இளம் தாய்மார்களுக்கும்
இளம் பாட்டிமார்களுக்கும்
குழந்தை பிறப்பு,
வளர்ப்பு குறித்து
சில யோசனைகளைக்
கூற வேண்டிய
நிலைமை காணப்படுகிறது.
இன்று
வயதான பாட்டிமார்கள்
உடன் இல்லாமல் கர்ப்பிணிகளை
அவர்களுடைய “நடுத்தரவயது’த் தாய்மார்கள் பார்த்துக்
கொள்கின்றனர். அவர்களும் பிள்ளை பெற்று 20 ஆண்டுகள்
கடந்துவிட்டபடியால் குழந்தை பிறந்தால்
என்ன செய்யவேண்டும்,
எப்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்,
பத்தியச் சமையல்
எப்படி சமைக்க
வேண்டும் என்பதையெல்லாம்
மறந்துவிட்டிருக்கின்றனர்.
குழந்தைக்கு
என்ன ஆகாரம்
தருவது, அழுதால்
அதற்குக் காரணம்
என்ன, கை
வைத்தியமாக என்ன செய்யலாம், எப்படிக் குளிப்பாட்டுவது
என்பதில் எல்லாம்
குழப்பம். அத்துடன்
மருத்துவமனைகளில் டாக்டர்களும் திருமணம்கூட ஆகாத மருத்துவ தாதிகள்
கூறும் யோசனைகளைத்தான்
பெரும்பாலும் கேட்க வேண்டியிருக்கிறது.
இப்போதெல்லாம்
பிள்ளை பெறும்
தாய்மார்களை பிரசவ வலி வந்த உடனேயோ
அல்லது டாக்டர்கள்
திகதி குறித்த
நாளிலேயோ மருத்துவமனையில்
சேர்த்துவிடுகின்றனர். சில மருத்துவமனைகளில்
பிரசவ வேதனையே
வேண்டாம் என்ற
நோக்கில் அறுவைச்
சிகிச்சை செய்து
குழந்தையை “எக்ஸ்பிரஸ்
டெலிவரி’ செய்துவிடுகின்றனர்.
”சிசேரியன்
கூடாதுதான், இடுப்பு வலி தாங்கவில்லை, பெண்ணுக்கு
உடம்பில் சக்தியில்லை
எனவே சம்மதித்துவிட்டோம்”
என்று பெண்ணைப்
பெற்றவர்களே இயலாமையை ஒப்புக்கொள்கின்றனர்.
இடுப்புவலி
என்பது தாங்க
முடியாததுதான். அதனால்தான் அந்தக் காலத்தில்,”அழுதாலும்
பிள்ளை அவள்தான்
பெற வேண்டும்”
என்று சொன்னார்கள்.
இடுப்புவலியின்போது தாயாருக்கு நோய்
எதிர்ப்பு சக்தி
உடலில் கூடுகிறது.
குழந்தைக்கும்
அது நோய்
எதிர்ப்புச் சக்தியை ஊட்டுகிறது. இது இயற்கை
தந்த வரம்.
அதே
நேரம், கர்ப்பிணி
இள மாதமாக
இருக்கும்போது போதிய ஓய்வு கொடுத்து சில
காலம் கழித்து
குனிந்து நிமிர்ந்து
நிறைய வேலையையும்
செய்யச் சொன்னார்கள்.
சுகப்பிரசவத்துக்கு அதெல்லாம் உதவின.
சமீபத்தில்
ஒரு சம்பவம்.
சிசேரியனில் பிறந்த குழந்தை பூஞ்சையாக இருந்ததால்
இன்குபேட்டரில் வைத்தார்கள். ஆனால் சிசு ஓயாமல்
அழுதுகொண்டே இருந்தது. வலியையும் பொருள்படுத்தாமல் குழந்தைக்கு அந்தத் தாய் பால்
கொடுத்தாள்.
அப்போதும்
அழுகை ஓயவில்லை.
என்ன செய்வது
என்று எல்லோரும்
திகைத்திருக்க குழந்தையைத் தன்னுடைய இடது மார்போடு
அணைத்தபடி பக்கத்தில்
படுக்கவிட்டாள் அந்த இளம்தாய். குழந்தை அழுகையை
நிறுத்திவிட்டு தூங்கியது. ஆம், கர்ப்பத்தில் இருக்கும்போது
கேட்ட தாயின்
இதய ஒலி
கேட்டதும் அதற்கு
பயம் நீங்கி
பத்திர உணர்ச்சி
ஏற்பட்டு அழுகையை
நிறுத்தியது.
பிறந்த
குழந்தையை 3 மாதங்கள்வரையில் இப்படித்தான்
தாய் தன்னோடு
அணைத்துக்கொண்டு தூங்கவேண்டும். பெரும்பாலான
குழந்தைகள் நாம் பேசுகிற சப்தத்தைக் கேட்டுக்கொண்டே
பகலில் தூங்கும்.
இரவில் நாம்
தூங்கும்போது சப்தம் கேட்காததால் அழும். அதை
ஒரு இம்சையாகக்
கருதுவோர் பலர்.
இதை நிறுத்தவும்
அதே வழிதான்.
தாய் தன்னுடன்
சேர்த்து குழந்தையை
அணைத்தபடி படுத்துக்கொள்ள
வேண்டும்.

0 comments:
Post a Comment