விதவைப் பெண்களுக்கு

சுயதொழில் உதவிகள் வழங்கும் நிகழ்வு.


பொத்துவில் அறுகம்பை புனர்வாழ்வு நிறுவனத்தினால் விதவைப் பெண்களுக்கு ஜீவனோபாய நடவடிக்கைக்காக தையல் இயந்திரம் வழங்கு நிகழ்வு பொத்துவில் மினாஉல் உலூம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவரும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் .எம்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் மஜீத், பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எம்.தாஜூதீன், முன்னாள் தவிசாளர் எம்.காதர் முகைதீன் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கணவனை இழந்து கஷ்டப்படும் விதவைப் பெண்கள் 54 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.



MAKKAL VIRUPPAM

MAKKAL VIRUPPAM


MAKKAL VIRUPPAM

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top