உங்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்:

வதோதராவில் நன்றி தெரிவித்து மோடி பேச்சு

பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையிடன் அமோக வெற்றி பெற்றது . பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி மற்றும் வதோதராவில் போட்டியிட்டிரூந்தார். இந்த இரண்டு தொகுதியில் பெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதையடுத்து அங்கு சென்ற மோடி, மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: வதோதரா சகோதர்கள் முன்பு தான் முதன்முதலில் உரையாற்ற விரும்பினேன். .உங்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன். வதோதராவில் 50 நிமிடம் தான் என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது.ஆனால் என்ககு 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அளித்துள்ளீர்கள் .ஜனநாய நடைமுறையை புரிந்து கொண்டதால் இந்த வெற்றியை அளித்துள்ளீர்கள். குஜராத்தில் 60 சதவீத மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். நான் ஏற்கனவே கூறிய படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி தந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

MAKKAL VIRUPPA

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top