குப்பை தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம்

தமிழ் நாட்டில் கொடூர சம்பவம்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் மெயின்ரோடு மதியழகன் தெரு சந்திப்பில் உள்ள  குப்பை தொட்டியில் இன்று காலை ஒரு பச்சிளம் ஆண்  குழந்தையின் சடலம் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு தொப்புள் கொடி கூட அறுக்கப்படவில்லை. அதை பார்த்த துப்புரவு தொழிலாளி பொலிஸுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சேகர்பாபு, தலைமையிலான பொலிஸ் குழு சென்று சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசியது யார்?  பொலிஸார் விசாரணை செய்து குற்றவாளியைத் தேடி வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.


மக்கள் விருப்பம்   மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top