சென்னை
11 மாடி கட்டிட விபத்தில்
பலியானவர்கள்
எண்ணிக்கை 47 ஆக உயர்வு
சென்னை
மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இன்று 5வது நாளாக மீட்பு
பணி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு முதல் இன்று காலை வரை மேலும் 10 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இத்துடன் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 47 ஆக
உயர்ந்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த
28-ஆம் திகதி 11 அடுக்குமாடி குடியிருப்பு
கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக
தீவிரமாக நடைபெற்றது. நேற்று இரவு 8.30 மணி அளவில் ஒரு பெண் உடலும் இரவு 10 மணி அளவில்
மேலும் ஒரு பெண் உடலும் மீட்கப்பட்டது. இரவும் சடலங்கள் மீட்கப்பட்டது. இதனால் இறந்தவர்களின்
எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது. 27 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் 5 பேர்
சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment