அமெரிக்காவில் 83 ஆண்டுகள் கழித்து
கடிதம் விநியோகம்!
அமெரிக்காவில்
1931ஆம் ஆண்டு
ஒரு பாடசாலை
ஆசிரியை தனது அம்மாவுக்கு எழுதிய
கடிதம், 83 ஆண்டுகள் கழித்து அவரது சகோதரி
மகளிடம் தற்போது விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில்
கடந்த 1931ஆம்
ஆண்டில் மைன்
மாகாணத்தில் உள்ள ஸ்கோவ்ஹேகன் நகரில் மிரியம்
மேக் மைக்கேல்
என்ற 23 வயது
பெண், பாடசாலை
ஆசிரியையாக பணியாற்றினார். அவர் தனது
அம்மா டோலேன்னா
மேக் மைக்கேலுக்கு
அப்போது 9 பக்கங்களில்
ஒரு கடிதம்
எழுதி அனுப்பியிருந்தார்.
ஆனால், அந்த
கடிதம் டோலேன்னாவுக்கு
போய் கிடைக்கவே
இல்லை. இப்போது இவர்கள் இருவருமே
இறந்து விட்டனர்.
சமீபத்தில் பிட்ஸ்பீல்டு என்ற ஊரில் உள்ள
தபால் நிலையத்தில்,
மிரியம் மேக்
மைக்கேல் எழுதிய
கடிதம் சிக்கியது.
அதை எடுத்த
ஊழியர், தபால்
அதிகாரியிடம் கையளித்தார்.
அந்த கடிதத்தில்
பழைய காலத்து
2 சென்ட் ஸ்டாம்ப்
ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்ததும், 1931ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கடிதம் என்பதை
கண்டுபிடித்தார். ஆனால் அதை அவர் தூக்கிப்
போடவில்லை. அந்த முகவரிக்கு ஆள் அனுப்பி
விசாரிக்கச் செய்தார். அங்கு கிடைத்த தகவலைக்
கொண்டு, ஒரு
வழியாக மிரியம்
மேக் மைக்கேலின்
சகோதரி மகளும்,
டோலேன்னாவின் பேத்தியுமான ஆன் மேக் மைக்கேல்
என்பவரை கண்டுபிடித்தனர்.
அவருக்கே இப்போது
69 வயதாகிறது. அவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அதை பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்தார். அமெரிக்காவிலும்
ஒரு கடிதம் 83 ஆண்டுகளுக்கு
பின் விநியோகம்
செய்யப்பட்டிருக்கிறது என்றால் பார்த்து
கொள்ளுங்கள். மிரியம் தனது அம்மாவுக்கு எழுதிய
கடிதத்தில், தான் இவ்வளவு காலதாமதமாக கடிதம்
எழுதியதற்கு மன்னிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த கடிதமும் அவருக்கு
போய் சேராமலே
போய் விட்டது.

0 comments:
Post a Comment