இலங்கையின்
மறுசீரமைப்புக்கு உதவ
தென்னாப்பிரிக்க
ஜனாதிபதியின் தூதுவர் இலங்கை வருகை
இலங்கையின்
மறு சீரமைப்புக்கு
உதவுவதற்காக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப்
ஜூமாவின்
சிறப்புத் தூதுவராக துணை ஜனாதிபதி சிறில் ரமபோச
2 நாள் பயணமாக கொழும்பு நகருக்கு வந்தடைந்துள்ளார்.
இவர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நேற்று அலரி மாளிகையில்
சந்த்தித்துப் பேசினார், வெளிநாட்டு அமைச்சர்
ஜி.எல்.
பீரிஸ்
மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை
சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக,
தமிழர் பிரச்னைக்கு
தீர்வு காண
உதவுவதற்காக தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள்
துறையின் துணை
அமைச்சராக இருந்த
இப்ராஹிம் இப்ராஹிம்
கடந்த 2012 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்திருந்தார்.

0 comments:
Post a Comment