மேலதிக  சிகிச்சைக்காக
நடிகர் விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்

தே.மு.தி.. தலைவரும் நடிகருமான  விஜயகாந்த் கடந்த 9 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் விஜயகாந்த் நேற்று இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் என அறிவிக்கப்படுகின்றது. அவருடன் மனைவி பிரேமலதா மட்டும் சென்றுள்ளார். விஜயகாந்தின் சிங்கப்பூர் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. விமான நிலையத்திற்கு தொண்டர்கள் யாரும் வரவில்லை.

அவர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. சிங்கப்பூரில் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top