பிரேசிலில்
பாலம் இடிந்து விழுந்து
இரண்டு பேர்
பலி 19 பேர் காயம்
உலகக்கோப்பை
கால்பந்து போட்டி
நடைபெற்று வரும்
பிரேசில் நாட்டில்
பாலம் ஒன்று
இடிந்து விழுந்ததில்
2 பேர் பலியாகினர்.
19 பேர் படுகாயம்
அடைந்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
கட்டுமான
பணிகள் நடைபெற்று
வந்த இப்பாலம்
திடீரென
இடிந்து விழுந்துள்ளது.
நாட்டில் கால்பந்து
போட்டி நடைப்பதையொட்டி
அங்கு போக்குவரத்து
நெருக்கடியை தவிர்க்க அங்கு பல்வேறு பகுதிகளில்
பாலங்கள் கட்டப்பட்டன.
பெலோ ஹாரிஜொந்தே
நகரில் கட்டுமானப்
பணி முடிவடையும்
நிலையில் இருந்த
பாலம் ஒன்று
நேற்று மாலை
திடீரென இடிந்து
விழுந்தது. இதில் கட்டிடத்திற்கு கீழே சென்ற
வாகனங்கள் சிக்கிக்
கொண்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாலம்
இடிந்து விழுந்ததில்
வேன் மற்றும்
லாரிகள் சிக்கிக்
கொண்டன. பாலத்தின்
இடிபாடுகளுக்கு இடையே ஒரு பாடசாலை பஸ் உட்பட பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன. பாலம்
இடிந்து விழுந்ததால்
அந்த இடமே
பெரும் பரபரப்பு
அடைந்தது. உடனடியாக
மீட்பு குழுவினருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்து
வந்த மீட்பு
படையினர் சிக்கியிருந்தவர்களை
காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில்
2 பேர் பலியாகினர்.
மேலும், 19 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று
பிரேசில் நாட்டு
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயம்
அடைந்த 19 பேர் உயிருக்கும்
போராடிய நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை
இன்னும் உயரக்கூடும்
என அஞ்சப்படுகிறது.
இந்த பாலம்
இடிந்து விழும்
அதிர்ச்சி காட்சி
அங்கிருந்த ஒரு சி.சி.டி.வி. கேமராவில்
பதிவாகியுள்ளது. இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள்
விசாரித்து வருகின்றனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
.https://www.youtube.com/watch?v=ahTz3GatMa4
.https://www.youtube.com/watch?v=ahTz3GatMa4



0 comments:
Post a Comment