நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்
போராளிகளால் எங்களுக்கு எந்த தீங்கும் இல்லை

போராளிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்திய நர்ஸ்



நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்; போராளிகளால் எந்த தீங்கும் இல்லை என்று போராளிகளால் கடத்தப்பட்ட தாகக் கூறப்பட்டஇந்திய நர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு .எஸ்..எஸ். போராளிகள் போர்க்கொடி உயர்த்தி, உக்கிரமாக சண்டையிட்டு வருகின்றனர். அந்த நாட்டின் 2-வது மிகப் பெரிய நகரமான மொசூல் நகரை கடந்த மாதம் 9-ஆம் திகதி .எஸ்..எஸ். போராளிகள் கைப்பற்றினர். அடுத்த 2 நாளில் அவர்கள் முன்னாள் அதிபர் சதாம் ஹுஸைனின் சொந்த நகரமான திக்ரித்தையும் பிடித்தனர். இந்த நகரில் உள்ள மருத்துவமனையில் இந்திய நர்ஸுகள் 46 பேர் (இவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்.) பணியாற்றி வந்தனர்.
இதில் சர்வதேச செம்பிறை சங்கத்தினரின் உதவியை இந்திய தூதரகம் நாடியது. அவர்களும் திக்ரித்தில் இந்திய நர்ஸுகளை தொடர்பு கொண்டு உதவிகள் செய்து வந்தனர். இருப்பினும் நர்ஸுகள், தாங்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்று 15 நாட்களுக்கு முன்பு உருக்கமான வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் ஈராக்கில் தமிழக நர்ஸு உட்பட 46 நர்ஸுகளை நேற்று போராளிகள் கடத்திச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனியார் செய்தி சேவை ஒன்றுக்கு செல்போன் மூலம் பேசியுள்ள இந்திய நர்ஸ் ஒருவர்நாங்கள் போராளிகளின் காவலில் பத்திரமாக உள்ளோம். அவர்கள் எங்களை மொசூலில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் வைத்துள்ளனர். போராளிகளால் எங்களுக்கு எந்த தீங்கும் இல்லை. அவர்கள் எங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வசதியை செய்து கொடுத்துள்ளனர்என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top