கொலம்பியாவை
2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது பிரேசில்: அரையிறுதியில் ஜெர்மனியை
எதிர்கொள்கிறது
உலக
கோப்பை கால்பந்து
போட்டியில், போர்ட்டாலிஜா மைதானத்தில் நேற்றிரவு
நடைபெற்ற 2-வது கால்இறுதி ஆட்டத்தில்
போட்டியை நடத்தும்
பிரேசிலும், கொலம்பியாவும் மோதின. இதில்,
ஆட்டம் தொடங்கிய
7வது நிமிடத்திலேயே பிரேசில்
அணி கோல்
அடித்து
முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆதிக்கம்
செலுத்திய பிரேசில்,
எதிரணியின் கோல் கம்பத்தை பல முறை முற்றுகையிட்டது.
கொலம்பியா கோல்
கீப்பர் சிறப்பாக
செயல்பட்டதால், 20 மற்றும் 28வது
நிமிடங்களில் பிரேசில் அணியின் கோல் முயற்சி
தடுக்கப்பட்டது.
முதல்
பாதியின் முடிவில்
பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. 69வது
நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பின்
மூலம் , பிரேசில்
அணி மேலும்
ஒரு கோல்
அடித்தது. பதில்
கோல் அடிக்க
கொலம்பியா வீரர்கள்
கடுமையாக போராடினர்.
அவர்களின் முயற்சிக்கு
பலன்கிட்டும் விதமாக, 80வது நிமிடத்தில் பெனால்டி
கிக் வாய்ப்பு
வழங்கப்பட்டது. கொலம்பியா அணியின் ரோட்ரிகஸ்,
பெனால்டி வாய்ப்பை
கோலாக மாற்றினார்.
இறுதியில் பிரேசில்
அணி 2-1 என்ற
கோல் கணக்கில்
வெற்றி பெற்று,
11வது முறையாக
அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து
எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி அணியை
பிரேசில் எதிர்கொள்கிறது.
முன்னதாக,
ரியோடி ஜெனீரோவில்
இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில், பிரன்ஸ் அணியை ஜெர்மனி வீழ்த்தியது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில்
13வது முறையாக
ஜெர்மனி அணி
அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment