ஈராக்கில்
போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்ட
46 இந்திய
நர்ஸ்கள் விடுவிப்பு
ஈராக்கில்
போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்ட இந்திய
நர்ஸ்கள் 46 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
46 நர்ஸ்களையும் போராளிகள் விடுவித்துள்ளதை செஞ்சிலுவை சங்கம்
உறுதி செய்துள்ளது.
ஈராக்கில் நடக்கும் உள்நாட்டு போரின் காரணமாக ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் திக்ரித் மருத்துவ மனையில் பணியாற்றி வந்த இந்திய நர்ஸ்கள் 46 பேரையும் நேற்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி மோசூல் நகருக்கு அழைத்துச் சென்றனர். போராளிகளினால் அழைத்துச்செல்லப்பட்ட நர்ஸ்களில் தமிழகத்தைச் சேர்ந்த நர்ஸ் மோனிசாவும் இருந்தார்.
அவர் தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்தவர் ஆவார். இதனிடையே இந்திய நர்ஸ்களை விடுவிக்க போராளிகள் ஒத்துக்கொண்டதாக போராளிகளின் பிடியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த சையோனா என்ற நர்ஸ் தமது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துகுடியை சேர்ந்த மோனிசா அளித்த தகவலில் தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், வாகனம் ஒன்றில் விமான நிலையம் நோக்கி பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.



0 comments:
Post a Comment