SLTJ இன் துணைச் செயலாளர் றஸ்மின் MISC அவர்களுக்கு
ஓர் திறந்த மடல்..!!
(துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்)
SLTJ இன் துணைச்செயலாளர் றஸ்மின் MISC அவர்களே..!
நீங்கள்
இலங்கையில் உள்ள இஸ்லாமிய அறிஞர் வரிசையில்
முதன் கண்
கொண்டு பார்க்கத்தக்க
ஒருவர். உங்கள் மார்க்க சம்பந்தமான பேச்சுக்கள், எழுத்தாக்கங்கள்
காலத்திற்கு மிக அவசியமானவை.உங்கள் ஆக்கங்களில்
இருந்து பல
இஸ்லாமிய விடயங்களில்
பலர் தெளிவு
பெற்றுள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனினும்,நீங்கள் ACJU ஜ
அதிகம் விமர்சிப்பது
ஏற்கத்தக்க ஒன்றல்ல.தனக்கு தெரிந்த ஒன்றை
அழகிய முறையில்
சொல்லவே இஸ்லாம்
எமக்கு கற்றுத்
தந்துள்ளதே தவிர இன்னுமொருவரை சாடி அவர்களில்
பிழை பிடித்து
அல்ல.
ACJU வைப் பற்றி நீங்கள் தெளிவாக
அறியாமை தான்
உங்கள் விமர்சனத்திற்கு
வித்திட்ட காரணியாகவும்
இருக்கலாம்.
அண்மையில்
நீங்கள் வெளியிட்ட
ஓர் ஆக்கத்தை
வைத்து இதனை
உங்களிற்கு தெளிவு படுத்தலாம் என விரும்புகிறேன்.
"குர்ஆன்,ஆதாரபூர்வமான ஹதீதை வைத்து
பத்வாக் கொடுக்க
வேண்டியவர்கள் ஊர் ஒற்றுமை,சமூக ஒற்றுமையை
அடிப்படையாய் கொண்டு பத்வாக் கொடுப்பதாக கூறியுள்ளீர்"
ACJU என்பது இலங்கையில் உள்ள அனைத்து
இயக்கங்களை ஒன்று சேர்த்து இலங்கை முஸ்லிம்களை
ஒருமித்து அணைத்து
செயற்பட்டுக் கொண்டிருப்பதால் ACJU ஆல் இப்படித்தான் பத்வாவை
வெளியிட முடியும்.
நீங்கள்
சொல்லும் 8 றகஅத்திற்கான விளக்கமும் சிலர் சொல்லும்
20 றகஅத்திற்கான விளக்கமும் ஏனைய றகஅத்திற்கான விளக்கமும்
மக்களிடம் நன்றாகவே
சென்றுள்ளது.சிறு பிள்ளையிடம் கேட்டாலும் ஆதரத்தை
கிழித்து உதறுவார்கள்.அந்தளவு மார்க்கம்
மக்களிடம் சென்றுள்ளது.நபியவர்களும் தனது
இறுதிப் பேருரையின்
போது மார்க்கத்தைப்
பூர்த்தியாக்கிவிட்டார்.
எனவே,அல்லாஹ்வை உண்மையான
நம்பிக்கை கொண்டு
நபியவர்களுடைய வாழ்க்கை வழி முறையை பெருமை,ஆணவம் இல்லாத
பின்பற்ற விளையும்
ஒருவரால் எது
சரி? எது
பிழை? என
தீர்மானிக்குமளவு மார்க்கம் மக்களிடம் சென்றுள்ளது.இதனை
நீங்களும் ஏற்பீர்கள்
என நம்புகிறேன்.
நீங்கள்
சொல்லும் 8 றகஅத்தை ஒருவர் புறக்கணிக்கின்றார் என்றால் அவர் உங்கள் கருத்தை
ஏற்கவில்லை என்றே பொருள் படுமே தவிர
மார்க்கத்தை அறிய அவா கொண்டேரிடம் உங்கள்
கருத்தும் ஏனையோர்
கருத்தும் செல்லாமல்
அல்ல.
கௌரவ
றஸ்மின் MISC அவர்களே!
நான்
சொல்வது தான்
சரி இதைத்
தான் பின்பற்ற
வேண்டும் என
உங்களால் நிர்ப்பந்திக்க
முடியாது.ஒவ்வொரு
இயக்கமும் தங்கள்
கொள்கைகளை தெளிவாக
விளக்கி மார்க்கம்
மக்களிடம் தெளிவாக
ஒப்படைக்கப்பட்டு விட்டது.இதன் பிறகுஎது சரி?
எது பிழை?
என தீர்மானிப்போர்
மக்கள் தான்.
எனவே,ACJU
பத்வாப் படி
உங்களுக்கு தெளிவானதை நீங்கள் பின்பற்றுங்கள் என்கிறது.இதில் என்ன
தவறு உள்ளது?இவ் பத்வாவினால்
மக்களிடையே பிரச்சினைகள்,குழப்பங்கள் ஏற்படமாட்டாது மாத்திரமன்றி
இஸ்லாமும் எது
வித குறைவுமின்றி
பின்பற்றப்படப்போகிறது.
உங்கள்
அமைப்பு உட்பட
ஏனையோரும் இவ்
பத்வாவை ஏற்றிருந்தால்,இவ் அடிப்படையில்
நடந்திருந்தால் உங்கள் சாய்ந்தமருது கிளை உடைக்கப்பட்டிருக்காது.உங்கள் கருத்தோ
யாரினதும் கருத்தோ
இங்கே மழுங்கடிக்கப்படவில்லை.
இவ் பத்வாவினால்
உண்மை மழுங்கடிக்கப்படவுமில்லை
,அழகாக சமூக
பிரச்சினைக்கும் தீர்வாகிறது.
எனவே,ACJU
ஜ விமர்சிப்பதை
விட்டு,விட்டு
உங்கள் கொள்கைகளை
அழகாக தெளிவுபடுத்தி
acju உடன் இணைந்து
செயற்படுங்கள்.

0 comments:
Post a Comment