வங்காளதேச
வீரர் ஷாகிப் அல் ஹஸன் விளையாட
6 மாதங்கள் தடை
கிரிக்கெட்
சபை அதிரடி
வங்கதேச
கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷாகிப்
அல் ஹஸன்
விளையாட
6 மாதங்கள் வங்காளதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
இது
பற்றி கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹஸன்
கூறுகையில், “அவரிடம் மிக மோசமான அணுகுமுறைப்
பிரச்சனை உள்ளது.
வங்கதேச கிரிக்கேட்
வரலாற்றில் இவரைப்போன்ற மோசமான அணுகுமுறை
உள்ள வீரர்களை
சந்தித்திருக்க முடியாது. அணியில் தாக்கம் ஏற்படுத்தும்
அளவுக்கு இவரது
நடத்தை மோசமாக
உள்ளது” எனத்
தெரிவித்துள்ளார்.
கரீபியன்
பிரீமியர் லீக்
20 ஓவர் கிரிக்கெட்
தொடருக்கு முன்
ஷாகிப் அல்
ஹஸன் டாக்காவிற்கு
வர வேண்டும்
என்று கிரிக்கெட்
சபை உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்கு
செவிசாய்க்காத ஷாகிப், பயிற்சியாளர் ஹதுரசிங்கவிடம் மோசமாக
நடந்து கொண்டார்
என்று வங்கதேச
கிரிக்கெட் சபை இவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறது.
வங்கதேச
கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியின்றி இவர்
கரீபியன் பிரிமியர்
லீகில் பங்கு
பெற முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில்
வங்கதேச கிரிக்கெட்
சபைத் தலைவரை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு அனுமதி
கிடைத்தது என்று
கருதியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பயிற்சியாளரிடம் மோசமாக
நடந்து கொண்டதற்காக
மன்னிப்பும் கேட்டுள்ளார்.
வங்கதேச
கிரிக்கெட் சபைத் தலைவர் கூறுகையில், “ஷாகிப்
அணுகுமுறையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. எனவே
அவருக்கு இதனை
வலிமையாக அறிவுறுத்த
விரும்பி 6 மாத காலம் எந்த வித
கிரிக்கெட்டிலும் அவர் பங்கு பெற தடை
விதித்திருக்கிறோம். மீண்டும் அவர்
இவ்வாறு நடந்து
கொண்டால் ஆயுள்
தடை விதிப்பதைத்
தவிர வேறு
வழியில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த
நிலையில் சர்வதேச
கிரிக்கெட்டிலிருந்து தான் விலகுவதாக
ஒருபோதும் கூறவில்லை
என்று ஷாகிப்
அல் ஹஸன்
தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment