சாமி இறக்கவில்லை தூக்கத்தில் இருக்கிறார்
கோடிஸ்வர சாமியாரின்
உடலை 6 மாதமாக பாதுகாக்கும் சீடர்கள்
இந்தியாவிலுள்ள
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆஸ்ரமம்
வைத்து நடத்திவருபவர்
ஸ்ரீ
அஸ்தோஷ் மகாராஜ்
சுவாமிகள்.(வயது 70). இவர் தெய்வீக ஒளி
விழிப்பு மிஷன்
என்ற அமைப்பையும்
நடத்தி வருகிறார்.இவருக்கு கோடிகணக்கான
சொத்துக்கள். உள்ளது இவர் கடந்த ஜனவரி
மாதம் மாரடைப்பால்
மரணமடைந்தார். இதை டாகடர்களும் உறுதி
செய்தனர். இருந்தாலும்
அவரது ஆதரவாளர்களும்-
சீடர்களும் அவர் இறக்கவில்லை அவர்
ஆழ்துக்கத்தில் உள்ளார் என தெரிவித்து கடந்த
6 மாதங்களாக அவரது சடலத்தை புதைக்காமல் ஐஸ்
பெட்டியில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அவரது
சீடர்கள், மருத்துவ
ரீதியாக அவர்
இறந்து இருக்கலாம்
என்றாலும் அவர்
ஆன்மிக ரீதியாக
உயிருடன் இருக்கிறார்.
சுய உணர்தல்
பாதையில் இருந்து
அவர் ஆழ்ந்த
தியான நிலைக்கு
சென்று உள்ளார்.
என கூறி
வருகின்றனர்.
அவரது
ஆதரவாளர்களில் ஒருவர் "இது அசாதாரணம் எதுவும்
இல்லை. மருத்துவ
அறிவியலால் யோக அறிவியல் போன்ற விஷயங்களை
புரிந்து கொள்ள
முடியாது.என்று
கூறுகின்றார். அவர் இறக்கவில்லை அவர் பரிசுத்தமாக
விரைவில் திரும்பி
வருவார் என்றும்
கூறுகின்றார்.
அதுவரை அவரது
உடலை பாதுகாப்போம்.
மற்றொருவர்
கூறும் போது
அவர் விரைவில்
திரும்பி வருவதாக
உறுதி அளித்து
உள்ளார் என்கின்றார்.
அவரது
ஆதரவாளர்கள் ஐஸ் பெட்டியில் வைத்துள்ளதால் அவருக்கு
எந்த துன்பமும்
இல்லை ஏன்
என்றால் அவர்
இமய மலையில்
மைனஸ் ஜீரோ
டிகிரி குளிரிலும்
அவர் பல
ஆண்டுகள் தியானம்
செய்து உள்ளார்
என தெரிவிக்கின்றனர்.
குரு
இத்தகைய தெய்வீக
தன்மை மூலம் மனிதனிடம்
மறைந்து உள்ள
ஆற்றலை எழப்பி மனித வரலாற்றில் ஒரு
புதிய புரட்சியை ஏற்படுத்துவார்
என அவரது
இணையதளத்தில் தெரிவிக்கபட்டு உள்ளது.
திவ்ய
ஜோதி ஜக்ரதி
சான்ஸ்தன் (தெய்வீக ஒளி விழிப்பு மிஷன்
அமைப்பு)க்கு உலகம் முழுவதும்
3 கோடி ஆதரவாளர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உலக
அமைதிக்காக இவர்கள் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.இந்த அமைப்புக்கு
இந்தியா உட்பட
பிரிட்டன்,அமெரிக்க,
தென் அமெரிக்கா,ஆஸ்திரேலியா,மத்திய
ஐரோப்பா, ஆகிய
இடங்களில் கோடிக்
கணக்கில் சொத்துக்கள் உள்ளன.
குருவின்
உறவினர்கள் அவருக்கு திருமணமாகி 40 வயதில் மகன்
உள்ளார் என
கூறுகின்றனர். குருவின் ஆதரவாளர்களும் அவரது சீடர்களும் அவரது சொத்துக்களை கைப்பற்ற
இவ்வாறு நாடகமாடுவதாக
உறவினர்கள் கூறுகிறார்கள்.
நீதிமன்றம்
இந்த விவகாரத்தில்
தலையிட்டு குருவின்
உடலை எடுத்து
இறுதி
சடங்கு நடத்த
ஏற்பாடு செய்யவேண்டும்
எனவும் கூறுகின்றனர்.

0 comments:
Post a Comment