இரண்டு மாதங்களில்
7 விடுதலைப் புலிகள்
மலேசியாவில்
கைது
கடந்த
இரண்டு மாதங்களில்
விடுதலைப் புலிகள்
இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள
நிலையில், அந்த
அமைப்பைச் சேர்ந்தவர்கள்
நாட்டிற்குள் பதுங்கியுள்ளனரா என்று தேடுதல்
வேட்டையை மலேசிய
அரசு துவக்கியுள்ளது.
விடுதலைப்
புலிகள் அமைப்பை
மீண்டும் உயிர்ப்பிக்க,
மலேசியாவிலிருந்து தாக்குதல் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்
அரசுக்கு கிடைத்துள்ளதாகக்
கூறப்படுகிறது. இதையடுத்து, விடுதலைப் புலிகள் மீதான
நடவடிக்கையை மலேசிய அரசு எடுத்துள்ளது.
இலங்கையில்
தனி ஈழம்
கேட்டு விடுதலைப்
புலிகள் அமைப்பு
போரில் ஈடுபட்டு
வந்தது. கடந்த
2009ம் ஆண்டு
நடைபெற்ற உள்நாட்டு
போரில் அந்த
இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அதையடுத்து,
விடுதலைப் புலிகள்
அமைப்பு முழுமையாக
அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
இந்நிலையில்,
நேற்று முன்தினம்
மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் விடுதலைப் புலிகள்
அமைப்பைச் சேர்ந்தவர்கள்
எனச் ச்ந்தேகிக்கும் 4 பேர் கைது
செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கடந்த இரண்டு
மாதங்களில் மட்டும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில்
கடந்த 1999ம்
ஆண்டு அப்போது
பதவி வகித்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை
கொல்ல நடந்த
முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரும் வியாழக்கிழமை
கைது செய்யப்பட்ட
4 பேரில் ஒருவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களின்
பெயர்களை தெரிவிக்க
மலேசிய பொலிஸார் ஊடகங்களுக்கு மறுத்துவிட்டனர் என அறிவிக்கப்படுகின்றது. ஆனால், அவர்களில்
ஒருவர் குண்டு தயாரிப்பதில் நிபுணர்
என்பதை உறுதி
செய்துள்ளனர்.விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்
பலர் மலேசியாவில்
இருக்கக் கூடும்
என்ற அச்சத்தில்
தீவிர தேடுதல்
வேட்டையை நடத்த
அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment