உம்ரா கடமையை நிறைவேற்ற சவூதிஅரேபியா சென்றுள்ள
முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டக் குழு

புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்டக் குழுவினர் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர மேயருமான சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான .எம்.ஜெமீல், சிரேஷ்ட சட்டத்தரணியும் மு.கா. சர்வதேச விவகார பணிப்பாளருமான .எம்.பாயிஸ் ஆகியோரே புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதிஅரேபியா பயனமாகியுள்ளனர்.

இவர்கள் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரபு நாடுகள் மற்றும் அமைப்புகளின் சில முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top