மும்பையில் தாவூத் இப்றாஹிம் தங்கை மரணம் அடைந்தார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்றாஹிமின் தங்கை ஹசீனா பார்கர் (வயது 55 ) மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
இவர் மும்பை நாக்பாடாவில் வசித்து வந்தார். மதியம் ஹசீனா பார்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உதவியாளர்கள் டோங்கிரியில் உள்ள ஹபிப் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாலை 3.15 மணியளவில் மரணம் அடைந்தார் எனக் கூறப்படுகின்றது.
ஹசீனா பார்கர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மரணமடைந்த ஹசீனா பார்கரின் உடல் மாலை 4 மணியளவில் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க நாக்பாடா பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்ஹசீனா பார்கர் மரணம் குறித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் தாவூத் இப்றாஹிமுக்கு தகவல் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஹசீனா பார்கரின் கணவர் இஸ்மாயில் கடந்த 1991–ம் ஆண்டு தாதா அருண் காவ்லி கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top