மூன்று ஊழியர்கள்
கொலை வழக்கில்
பத்திரிக்கை ஆசிரியர் குற்றவாளி
– இந்திய அகர்தாலா நீதிமன்றம் அறிவிப்பு
இந்தியாவிலுள்ள
திரிபுரா மாநிலத்தின் தினசரி நாளிதழ்
தய்னிக் கன்தூத்தின்
உரிமையாளரும், ஆசிரியருமான சுஷில் சவுதாரி மூன்று
ஊழியர்கள் கொலை
செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று அகர்தாலா
நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த
ஆண்டு பத்திரிக்கையில்
வேலை பார்த்த
சாரதி, புருப்
ரீடர் மற்றும்
முகாமையாளர் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். நில
விவகாரங்களில் சுஷில் சவுதாரிக்கு உள்ள
தொடர்பை வெளிப்படுத்தப்போவதாக
பத்திரிக்கையின் முகாமையாளர் ராஞ்சித் சவுதாரி மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து ராஞ்சித் சவுதாரியை திட்டமிட்டு சுஷில்
சவுதாரி கொலை
செய்துள்ளார். கொலைக்கு திட்டமிட்டதில் சுஷில் சவுதாரியின்
கார் சாரதி
பலராம் கோசுக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில் மானேஜர் கொலை செய்யப்பட்டதை பத்திரிக்கையில்
பணிபுரிந்த புருப் ரீடர் சுஜீத் பட்டாச்சாரியா
பார்த்துள்ளார். இவர்கள் இருவருமே கொலையை நேரடியாக
பார்த்த சாட்சிகள்.
இந்நிலையில் இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர்
கத்தியால் குத்திக்
கொண்டனர் என்று
கூறப்பட்டது.
பத்திரிக்கை
ஆசிரியர் சுஷில்
சவுதாரி இருந்தபோதே
இந்த கொலைகள்
நடந்துள்ளது. கொலையை அடுத்து பத்திரிக்கை மீது
கொலைத் தாக்குதல்
நடத்தப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. மோட்டார்
சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பத்திரிக்கை
மீது தாக்குதல்
நடத்தினர் என்று
கூறப்பட்டது. சுஷில் சவுதாரி நான் மாடியில்
இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று
கூறினார். ஆனால்
தாக்குதல் நடத்தப்பட்டதற்கான
காரணம் குறித்து
தெளிவான காரணம்
கூறப்படவில்லை. கொலையாளிகள் குறித்து தகவல் கொடுத்தால்
ரூ. 10 லட்சம்
வழங்கப்படும் என்று சுஷில் சவுதாரியே அறிவித்தார்.
சந்தேகத்தின்பேரில் பொலிஸார் விசாரணை
நடத்தினர்.
பத்திரிக்கை
அலுவலகத்தில் கொலை சம்பவம் நடந்தபோது அங்கு
இருந்த சாரதி
பலராம் கோசுவின் மனைவி நியாதி
அப்புருவர் ஆகி உண்மையை தற்போது வெளியிட்டுள்ளார். இதனையடுத்து சுஷில்
சவுதாரியிடம் பொலிஸார் விசாரித்தனர். இந்த வழக்கு
தொடர்பான விசாரணை
அகர்தாலா நீதிமன்றத்தில்
நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் சுஷில் சவுதாரியை குற்றவாளி என்று அறிவித்துள்ளது.
அவருக்கான தண்டனை
விபரம் 17 ஆம்
திகதி வியாழக் கிழமை அறிவிக்கப்படும் என்று
நீதிமன்றம் கூறியுள்ளது.
அவருக்கு மரண
தண்டனை விதிக்கப்படலாம்.
மூத்த பத்திரிக்கை
ஆசிரியரான சுஷில்
சவுதாரி இந்தியப்
பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் வெளிநாட்டு
பயணங்களுக்கும் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment