டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு 

ஜெயவர்தன திடீர் முடிவு!





 பாகிஸ்தான் அணியுடன் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள தொடருடன், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கிரிக்கெட்  அணி அனுபவ வீரர் மகிள ஜெயவர்தன (வயது37) அறிவித்துள்ளார். கடந்த 1997ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஜெயவர்தன , இது வரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,493 ஓட்டங்களைக்  குவித்துள்ளார் (அதிகம் 374, சராசரி 50.18, சதம் 33, அரை சதம் 48).
ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ள உலக கோப்பை போட்டி வரை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top