நயன்தாராவுடன்
காதல்?
உதயநிதி தற்கொலை முயற்சி
என வெளியான தகவலால்
பதற்றம்; பரபரப்பு
திரையுலகில்
அண்மைக் காலமாக
மீண்டும் பட
வாய்ப்புகள் பெற்று அடுத்த சுற்றில் வலம்
வரும் நடிகை
நயன்தாராவுடன் உதயநிதிக்கு காதல் பிரச்னை இருப்பதாகவும்,
அதனால் அவர்
மனவருத்தத்தில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாகவும்
ஒரு வலைத்தளத்
தகவலும் சமூக
வலைத்தளங்களில் செய்திகளும் வேகமாகப் பரவின. உதயநிதி
மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டதாகவும்,
அவரது தற்கொலை
முயற்சி குறித்து
மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்ததாகவும்
சமூக ஊடகங்களில்
இன்று காலை
முதலே பரவலாக
விவாதிக்கப்பட்டது.
முதல்
படத்தில் துவங்கிய
இவர்களின் நெருக்கம்
இரண்டாவது படத்திலும்
தொடர்ந்தது. உதயநிதி, இந்தப் படத்திலும் நயன்தாராவையே
ஜோடியாக்கினார். இந்த நட்பே அவருக்கு நாளடைவில்
நயன்தாரா மீது
காதலாக மாறிவிட்டதாம்.
ஆனால், நயன்தாரா
தரப்பில் மறுப்பு
தெரிவிக்கப்படவே, உதயநிதி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
அந்நேரம், உதயநிதிக்கு
நெருக்கமான நடிகர் ஒருவர், அவரை உடனே
மருத்துவமனையில் சேர்த்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப்
பேசப்பட்டது.
இந்நிலையில்,
இப்படிச் செய்தி
வெளியானதால், உதயநிதி ஆதரவாளர்கள் பெரும் கொந்தளிப்படைந்தனர்.
இதனால் சென்னையில்
சில இடங்களில்
பதற்றம் ஏற்பட்டுள்ளதாக
இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்
பணியில் பொலிஸார்
அதிக எண்ணிக்கையில்
ஈடுபடுத்தப் பட்டனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment