அளுத்கம, பேருவளைச் சம்பவங்களுக்காக குரல் கொடுத்த
சட்டத்தரணிகள் சங்க தலைவரை தொடரும் அச்சுறுத்தல்!
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சட்டத்தரணிகள்
சங்க தலைவர்
உபுல் ஜயசூரிய
கருவாத்தோட்டம் (கொழும்பு -7) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஒன்றினை செய்துள்ளார்.
தன்மீது துப்பாக்கி
பிரயோகம் மேற்கொள்ளும்
நோக்கில் தன்னை
பின்தொடர்ந்து சிலர் வருவதனை தன்னால் அவதானிக்க
முடிந்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அளுத்கம
வன்முறையின் போது கொல்லப்பட்ட ஒருவரது உடலில்
துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்பட்ட
நிலையில் அவர்
வெட்டுக் காயங்களுக்கு
உள்ளாகி உயிரிழந்ததாக
சட்ட வைத்திய
அதிகாரியின் அறிக்கையில் காணப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.
இதனையடுத்து
சடலத்தை தோண்டுமாறு
இலங்கை சட்டத்தரணிகள்
சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய
நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை தெரிந்ததே.
பொதுபல
சேனாவின் நடவடிக்கைகள்
குறித்தும் விசாரணை நடத்துமாறும் பொதுபல சேனா
இயக்கத்திற்கு எதிராக அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணை
நடத்த வேண்டுமென்றும்
உபுல் ஜயசூரிய
தலைமையிலான சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தி இருந்தது.
பொதுபல
சேனா இயக்கத்தின்
நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்போர்
உரிய நடவடிக்கை
எடுக்காமை கண்டிக்கப்பட
வேண்டியது என்றும்
பொதுபல சேனா
இயக்கம் குரோத
உணர்வைத் தூண்டும்
வகையில் கருத்து
வெளியிட்டு வருவதாகவும் அந்தச் சங்கம் குற்றம்
சுமத்தியமையும் தெரிந்ததே.
இதேவேளை,
சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக்
கூடாது என
பொதுபல சேனாவின்
செயலாளரான கலபொடஅத்தே
ஞானசாகர தேரரரை
நீதிமன்றம் அண்மையில் எச்சரித்திருந்தது.

0 comments:
Post a Comment