உலககோப்பை கால்பந்து போட்டி:

பிரேசிலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஜெர்மனி

உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் அபாரமாக வீழ்த்திய ஜெர்மனி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 25 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து 5 கோல்களை அடித்து ஜெர்மனி அசத்தியது. ஜெர்மனி அணியின் அபார ஆட்டத்தை கண்டு செய்வதறியாது திகைத்த பிரேசில் வீரர்கள் தடுமாறினர். ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ஜெர்மனி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்று சுலபமாக கணிக்க முடிந்தது. இதனையடுத்து அரங்கத்தில் இருந்த 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரேசில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

பின்னர் ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் ஜெர்மனியே ஆதிக்கம் செலுத்தியது. அதன் பின்னர் 2 கோல்களை அடித்த ஜெர்மனி  தனது கோல் கணக்கை 7 ஆக உயர்த்தியது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பிரேசில் அணி 1 கோல்  அடித்து ஆறுதல் அடைந்தது. இறுதியில் பிரேசில் ரசிகர்களின் நெஞ்சங்கள் நொறுங்க 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top