காசா மீது இஸ்ரேல் இராணுவத்தினரால் கண்மூடித்தனமான தாக்குதல்

டில்லியில் இஸ்ரேல் தூதரகம் முன் 

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காசா மீது இஸ்ரேல் இராணுவத்தினரால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து டில்லியில் இஸ்ரேல் தூதரகம் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இஸ்ரேலின் காசா மீதான போர் நடவடிக்கையை கண்டித்து டில்லியில் அவுரங்காபாத் ரோட்டில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து இருந்ததுஇதைத்தொடர்ந்து இஸ்ரேல் தூதரகம் உள்ள பகுதிகளில் பொலிஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர். மாணவர் அமைப்பின் அழைப்பை ஏற்று மாணவர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனத்தினர் அந்த பகுதியில் திரண்டனர்.

அவர்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றபோது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி 70 பேரை கைது செய்தனர். அப்போது அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கோஷம் போட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் நியாயமான போராட்டத்தை பொலிஸார் தங்களது வன்முறையால் தடுக்க முயன்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் கவிதா கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இதுபற்றி பொலிஸார் கூறுகையில்பாதுகாப்பு மிகுந்த பகுதியில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடைஉத்தரவு உள்ளது. அதை மீறி அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதுஎன்று தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top