காஸா முனைப் பகுதியில்
இஸ்ரேல் தாக்குதலில்
பலி எண்ணிக்கை
173 ஆக உயர்வு
இஸ்ரேல்
நாட்டைச் சேர்ந்த
3 பேர் பாலஸ்தீனத்தின்
ஹமாஸ் போராளிகளால்
கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் போராளிகளின் பிடியில்
உள்ள காஸா
முனைப் பகுதியில்
இஸ்ரேல் இராணுவம்
கடந்த ஒரு
வாரமாக தீவிர
தாக்குதல் நடத்தி
வருகிறது. இதேபோல்
ஹமாஸ் போராளிகளும்
இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசி தாக்கி வருகின்றனர்.
ஹமாஸ் போராளிகளுக்கு
ஆதரவாக லெபனான்
நாட்டில் இருந்து
அல்கொய்தா போராளிகளும்
இஸ்ரேலுக்குள் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர்.
இந்த நிலையில்
இஸ்ரேல் இராணுவம்
நேற்று தரைவழியாக
சென்றும் ஹமாஸ்
போராளிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்தின.
சுமார் 200க்கும்
மேற்பட்ட இலக்குகளை
நோக்கி தாக்குதலை
நடத்திவிட்டு இராணுவம் பத்திரமாக திரும்பியதாக இஸ்ரேல்
இராணுவ அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய போர்
விமானங்கள் காஸாவின் பெய்ட் லாகியா பகுதியில்
வசிக்கும் மக்களை
அப்பகுதியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி பாதுகாப்பான
இடங்களுக்கு செல்லுமாறு துண்டுபிரசுரங்களை
வீசி எச்சரித்தன.
இந்த நகரில்
மட்டும் சுமார்
1 லட்சம் பேர்
வசிக்கிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments:
Post a Comment