கல்முனை
ஸாஹிறாக் கல்லூரியில்
தொழில் நுட்ப பீடத்துக்கான
அடிக்கல் நடும் விழா!
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் தொழில் நுட்ப கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் பீ.எம். பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்., கிழக்கு மாகாண
சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான எ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபையின் தேசிய
காங்கிரஸ் உறுப்பினரான ஆரீப்
சம்சுதீன் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை மாநகர
சபையின் பிரதி முதல்வர் எம்.ஐ.பிர்தௌஸ், கல்முனை மாநகர
சபையின் முன்னாள் பிரதி
முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஸீர், கல்முனை வலய
கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் சபைத்
தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம், கல்லூரி பழைய மாணவர் சங்க
செயலாளர்- பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா,
பாடசாலை அபிவிருத்தி சபை
செயலாளர்- நிலஅளவையாளர் எம்.ஏ.றபீக், பொறியியலாளர் ஹலீம் ஜௌஸி,
முன்னாள் அதிபர் மர்ஜுனா ஏ காதர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.





0 comments:
Post a Comment