காதலியின் நகையை திருடியதாக
முன்னாள் கால்பந்து வீரர் மரடோனாவுக்கு சம்மன்

காதலியின் வைர நகைகளை திருடியதாக முன்னாள் கால்பந்து வீரர் மரடோனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் டிகோ மரடோனா (வயது53). கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் ஆவார்.
கால்பந்து விளையாட்டை மேம்படுத்த டுபாயில் தூதவராக அவர் நியமிக்கப்பட்டார். அதற்காக அவர் கடந்த மாதம் அங்கு சென்று தங்கினார்.
இவருடன் அவரது முன்னாள் காதலி ரோசியோ ஒலிவா (வயது22) என்பவருடன் தங்கியிருந்தார். அப்போது அவரிடம் இருந்த விலை மதிப்புமிக்க கடிகாரங்கள் மற்றும் வைர கம்மல்களை காணவில்லை. அவற்றை மரடோனா திருடியதாக ஒலிவா டுபாய் பொலிஸில் புகார் செய்தார். அதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மரடோ னாவுக்கு டுபாய் பொலிஸார் சம்மன் அனுப்பியுள் ளனர். அதில், அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட் டுள்ளது.

சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு சர்வதேச பொலிஸ் உதவியையும் நாடப்படுகிறது என்றும் வெளிநாட்டு  ஊடகங்கள் இது தொடர்பாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top