முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை
-
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
இந்த
மாத இறுதியில்
ஜனாதிபதி தலைமையில்
இடம் பெறும்
முதலமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளப்
போவதில்லை என்று
அறிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
கடந்த ஜனவரி மாதம்,
ஜனாதிபதியுடனான சந்திப்பில் வழங்கப்பட்ட பத்து உறுதிமொழிகளில்
எவையுமே நிறைவேற்றப்படவில்லை
என்றும் அவர்
குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று
நடைபெற்ற வடக்கு
மாகாணசபை அமர்வில்,
வடக்கு மாகாண
ஆளுநர் சந்திரசிறியின்
பதவி நீடிப்புக்
குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதன்போதே முதலமைச்சர்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதியுடனான
கலந்துரையாடல் இடம்பெற்ற சமயத்தில், முதலமைச்சர்களின் மாநாடு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று
வரையில் அது
நடைபெறவில்லை. எனவே எனக்கு அதற்குப் போக
வேண்டிய தேவை
இருக்கவில்லை. ஆனால்
கடந்த வாரம்
அவ்வாறு நடத்தடவுள்ளது
என்று தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி முன்னிலையில்
சகல முதலமைச்சர்களையும்
கூட்டத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். எனக்கு
வேறு கூட்டங்கள்
இருப்பதனால் அதில் பங்கெடுக்க முடியாது என்று
ஏற்கனவே அவர்களுக்கு
அறிவித்துள்ளேன். எதிர்கட்சித் தலைவர், நாங்கள் மத்திய
அரசுடன் ஒத்துப்
போக வேண்டும்
என்ற விதத்தில்
பேசியிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், ஜனவரி
மாதம் இடம்பெற்ற
பேச்சில், பத்து
விடயங்களை நிறைவேற்றுவதாக
அவர் கூறியிருந்தார். ஆனால்
அவற்றில் ஒன்றைத்தானும்
அவர் நிறைவேற்றவில்லை''
என்று அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment