சண்டையை நிறுத்துவதற்கான திட்டத்தை ஹமாஸ் இயக்கம் ஏற்க

அரபு நாடுகள் வலியுறுத்த வேண்டும்

- அமெரிக்கா

சண்டையை நிறுத்துவதற்கான  திட்டத்தை ஹமாஸ் இயக்கம் ஏற்க அரபு நாடுகள் வலியுறுத்த வேண்டும்  என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த சண்டையில் இஸ்ரேல் போர் விமானங்கள், காஸா முனையில் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் 202 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் அடங்களாக அப்பாவி பொதுமக்கள்.
இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டுவீச்சுக்கு பயந்து ஆயிரக்கணக்கான காஸாமுனை மக்கள் இடம் பெயர்ந்து, .நா. முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பும் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று .நா. அழைப்பு விடுத்தது. ஆனால் நிலைமையில் மாற்றம் இல்லை.
இந்த நிலையில் எகிப்து சண்டை நிறுத்த திட்டம் ஒன்றை முன்வைத்தது. அந்த திட்டத்தில், ‘செவ்வாய்க்கிழமை (நேற்று) இரு தரப்பிலும் சண்டையை நிறுத்தி விடவேண்டும், அதைத் தொடர்ந்து இஸ்ரேல்பாலஸ்தீன தூதுக்குழுவினர் பேச்சு நடத்த வேண்டும், இதில் எகிப்து மத்தியஸ்தம் செய்யும்என கூறப்பட்டுள்ளது. எகிப்து முன்வைத்த திட்டத்தை ஏற்று சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது. எகிப்து முன்னெடுத்துள்ள இந்த முயற்சியை அமெரிக்கா வரவேற்றது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கருத்து தெரிவிக்கையில், ‘‘சண்டை நிறுத்தம் என்ற நோக்கத்தை அடைவதற்கு எகிப்து முன்வைத்த திட்டம் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. நாம் தேடுகிற அமைதியை அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. காஸா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் புகைப்படங்கள் நெஞ்சை பிளப்பதாக உள்ளது’’ என கூறினார்.

ஆனால் ஹமாஸ் போராளிகள் நிராகரித்துவிட்டனர். இந்நிலையில் இன்று காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் விமான தாக்குதல் நடத்தியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சண்டை நிறுத்த திட்டத்தை ஹமாஸ் இயக்கம் ஏற்க அரபு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top