லிபியாவில் திரிபோலி விமானநிலையம் மீது
போராளிகள் தாக்குதல்

லிபியாவில் கடாபி கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நாள் முதல் போராளிகள் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 13 ஆம் திகதி தலைநகர் திரிபோலி மற்றும் கிழக்கு நகரமான பெங்காசி ஆகிய இடங்களில் போராளிகள் நடத்திய தாக்குதல்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் திரிபோலி விமான நிலையம் மீது போராளிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 90 சதவீத விமானங்கள் மற்றும் கார்கள் சேதம் அடைந்தனமேலும் 2 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

லிபியாவில் ஏற்பட்டு வரும் தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து அங்குள்ள தூதுவரை .நாவெளியேற்றியுள்ளது., பாதுகாப்பு காரணமாக திரிபோலி விமானநிலையத்தை மூடவும் லிபியா அரசுக்கு .நாஅறிவுரை வழங்கியுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top