இங்கிலாந்து அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
வெளியுறவு அமைச்சர் பதவி விலகல்

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி கடந்த 4 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.
அதற்கு முன்பாக, கடைசி முறையாக தனது அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் டேவிட் கேமரூன் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அமைச்சர்களை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், நேற்று பதவி விலகினார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், 4 ஆண்டுகள் பிரதிநிதிகள் சபையின் தலைவராக பணியாற்றிய நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது 12 அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.


அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் பி.பி.சி. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தற்போதைய இராணுவ அமைச்சர் பிலிப் ஹேமண்ட், புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார் என தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top