சமுகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படும்போது

மக்கள் பிரதிநிதிகள் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடாமல் பாராளுமன்றதில் தைரியமாகப் பேசவேண்டும்

                                               -    மக்கள் விருப்பம்




சமுகத்திற்கு பாதகமான பிரச்சினைகள், மக்களிடையே உள்ள குறைகள், தேவைகள் என்பனபற்றி மக்கள் மன்றமான பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதற்காக  மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகள் சமுகத்திற்கு ஏற்படும்போது அது  சம்மந்தமாக  பாராளுமன்றத்தில் குரல் எழுப்பாமல் பத்திரிகைகளுக்கு மட்டும் அறிக்கைகள் விடுவதையும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருப்பது ஏன்? என புத்திஜீவிகள் மற்றும் அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்புவதுடன் இது குறித்து கவலையையும் வெளியிடுகின்றனர்.
அமைப்பு என்ற ரீதியிலும் தனியாகவும் யாரும் பத்திரிகைகளுக்கு அறிக்கைவிட முடியும். ஆனால், நாட்டின் உயர்மன்றமான பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளைத் தவிர வேறு எவரும் அங்கு சென்று பேச முடியாது. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கே மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் பேசப்படும் பேச்சுக்கள் நாட்டில் வாழும் சகல மக்களினதும் பிரதிநிதிகளுக்கும் சென்றடைகின்றது. பெரும்பாலும்  நாட்டிலுள்ள சகல மொழி பத்திரிகைகளிலும் செய்தியாகவும் வெளியாகிவிடுகின்றது.  இதற்கும் மேலாக ( HANSARD ) எனும் பாராளுமன்ற நடவடிக்கைகளின் அதிகாரபூர்வமான தொகுப்பிலும் பதிவாகின்றது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு இப்படியான வசதிகளுடன் உரிமை உள்ள நிலையில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சமுகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகளை மக்கள் மன்றமான பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறி தெளிவுபடுத்தாமல் ( தமிழ் ) பத்திரிகைகளுக்கு மாத்திரம் அறிக்கையாக வழங்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
அண்மையில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக பிரதி அமைச்சர் சரத் வீரசேகர நிகழ்த்தியதாகக் கூறப்படும் உரை சம்மந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம் பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவின் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உரைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அந்த இடத்தில் இருந்திருப்பாரேயானால் அவ்விடத்திலேயே மறுத்து பதிலளித்துப் பேசியிருக்க வேண்டும்.
அவர் அந்த இடத்தில் இருந்திருக்கவில்லையானால் சமுகத்தின்மீது அதிக அக்கறை காட்டும் மக்கள் பிரதிநிதியாக  பைஸல் காசிம் இருப்பாரானால் மக்கள் மன்றமான பாராளுமன்றத்தில் இப்படியான முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு மறுத்து பதிலளித்துப் பேச வேண்டும்.  இல்லையேல் இப்படியான பத்திரிகை அறிக்கைகள் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் (பே காட்டும்) ஒரு நடவடிக்கையாகவே கருத முடியும் எனவும் புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ( தமிழ் ) பத்திரிகைகளுக்கு அறிக்கை வழங்குவதை நிறுத்திவிட்டு (படித்தவர்கள், விடயம் தெரிந்தவர்கள் எவரும் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்க முடியும் ஆனால், பாராளுமன்றத்தில் பேசிவிடமுடியாது. மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே பேசமுடியும்) மக்கள் மன்றமான பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று பேச வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாகும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top