பெல்ஜியத்தை தோற்கடித்து
அரை இறுதிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசிலியாவில் நேற்று நடந்த கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாபெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8–வது நிமிடத்தில் சக வீரர் டி மரியா கடத்தி கொடுத்த பந்தை, அர்ஜென்டினா வீரர் கோன்சலே ஹிகுவைன் கோலாக்கினார்.

இதன் பின்னர் இரு அணி வீரர்கள் கடுமையாக போராடிய போதிலும் பந்து கோல் வலைக்குள் செல்லவேயில்லை. 55–வது நிமிடத்தில் ஹிகுவைனுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பந்து கம்பத்தில் பட்டு பின்வாங்கி விட்டது. இதன் பின்னர் அர்ஜென்டினா அணி வீரர்கள் தங்கள் யுக்தியை மாற்றி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். பெல்ஜியம் வீரர்கள் தங்கள் கோல் கம்பம் பக்கம் வந்தாலே ஏதாவது ஒரு வழியில் பந்தை வெளியே தள்ளிவிட்டு அவர்களின் முயற்சிகளை முறியடித்தனர். முடிவில் அர்ஜென்டினா அணி 1–0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top