ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி
இந்திய உயர் நீதிமன்றில் மனு

ராஜீவ் கொலை வழக்கில் முடிவில் மரண தண்டனை பெற்று பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப் பெற்ற நளினி இந்திய உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.‘
நலினியின் அந்த மனுவில்  கூறி யிருப்பதாவது:-
எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2000 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நான் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன்.
எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அதே மாதிரி தண்டனை பெற்ற சுமார் 2200 பேர் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய குற்றத்தண்டனை சட்டம் 432 மற்றும் 433 பிரிவுகளின் கீழ் விடுதலை பெற்று சென்று விட்டனர்.
நான் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும், அது பற்றி பரிசீலிக்கப்படவில்லை.சி.பி.. விசாரணை நடத்திய ஒரே காரணத்துக்காக எனக்கு விடுதலை மறுக்கப்படுகிறது. சட்டப் பிரிவு 435ன் கீழ் உள்ள ஷரத்துக்களை மேற்கோள் காட்டி என்னை விடுதலை செய்ய இயலாது என்று சொல்கிறார்கள்.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் முன்பு அவர்கள் இந்த சமுதாயத்தில் மற்றவர்களுடன் சராசரியான, இயல்பான வாழ்க்கையை வாழ முடியுமா என்பது பற்றி மட்டுமே மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அந்த சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆயுள் தண்னை கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய தேவை இல்லை.


ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்கும் போது மாநில அரசு, அவர் சராசரி வாழ்க்கை வாழ ஏற்ற வகையில் உள்ளாரா என்றுதான் பார்க்குமே தவிர யார் விசாரித்தார்கள் என்று பார்க்க மாட்டார்கள். எனவே எனக்கு இதில் நீதி வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் நளினி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top