ஆஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 41 பேர் இலங்கையிடம் ஒப்படைப்பு

ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் திட்டத்துடன் படகில் சென்ற இலங்கையைச் சேர்ந்த 41 பேரை இலங்கை அதிகாரிகளிடம் ஆஸ்திரேலியா ஒப்படைத்தது
.இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆஸ்திரேலிய கடற்பகுதியில் சந்தேகப்படும்படி நுழைந்த படகு ஒன்றை கோகோஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினர் இடைமறித்தனர். அப்போது அந்த படகில், ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் திட்டத்துடன் இலங்கையைச் சேர்ந்த 41 பேர் இருந்தனர்.அவர்களில் 4 பேர் தமிழர்கள், எஞ்சிய 37 பேரும் சிங்களர்கள் ஆவர். இதனையடுத்து அவர்களிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு அவர்களிடம் சோதனையும் நடத்தினர். பின்னர் 41 பேரையும் இலங்கையின் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேற வருபவர்களை அந்நாட்டிடமே ஒப்படைப்பதை ஆஸ்திரேலியா வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 79 பேரை இலங்கையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைத்தது. அதை பின்பற்றியே 41 பேரையும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "அந்த படகில் இருந்த மேலும் ஒரு சிங்களர் இருந்ததாகவும், அவருக்கு ஆஸ்திரேலியாவில் குடியேற உரிமை இருந்தும், அவர் மற்றவர்களுடன் செல்லப் விரும்புவதாக தெரிவித்து விட்டார்' எனவும் கூறப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top